வீரர்களுக்கான உணவுப்பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை.. கிராம மக்கள்

வீரர்களுக்கான உணவுப்பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை.. கிராம மக்கள்

வீரர்களுக்கான உணவுப்பொருட்கள் திருட்டுத்தனமாக விற்பனை.. கிராம மக்கள்
Published on

எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த உயரதிகாரிகள், வீரர்களுக்கு சேர வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களை திருட்டுத்தனமாக குறைந்த விலையில் பொதுமக்களுக்கு விற்பதாக பாதுகாப்பு படை முகாம் அருகே வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவத்தின் 29-வது பட்டாலியனில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் தேஜ் பகதூர் யாதவ். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தினமும் 11 மணி நேரம் நின்று கொண்டே வேலை பார்க்கும் நாங்கள் பெரும்பாலும் வெறும் வயிற்றுடனே தூங்கச் செல்கிறோம். எங்களின் அவல நிலை யாருக்கும் தெரியாமல் உள்ளது என பேசியிருந்தார். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவித்த பாதுகாப்பு படை, தேஷ் பகதூர் யாதவ் ஒரு குடிகாரர் என விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில், எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த உயரதிகாரிகள், வீரர்களுக்கு சேர வேண்டிய பொருட்களை திருட்டுத்தனமாக பொதுமக்களுக்கு பாதி விலையில் விற்பதாக பாதுகாப்பு படை முகாம் அருகே வசிக்கும் கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வீரர்களுக்கான அரிசி, பெட்ரோல், மசாலா சாமான்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை திருட்டுத்தனமாக பாதி விலையில் பொதுமக்களுக்கு விற்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே, எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் குற்றச்சாட்டு குறித்து விளக்க அறிக்கை சமர்ப்பிக்குமாறு எல்லைப் பாதுகாப்புப் படை நிர்வாகத்துக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com