முன்ஜென்ம பாவம் காரணமாக புற்றுநோய் வருகிறது: அஸ்ஸாம் அமைச்சர் கருத்து

முன்ஜென்ம பாவம் காரணமாக புற்றுநோய் வருகிறது: அஸ்ஸாம் அமைச்சர் கருத்து
முன்ஜென்ம பாவம் காரணமாக புற்றுநோய் வருகிறது: அஸ்ஸாம் அமைச்சர் கருத்து

முந்தைய ஜென்மத்தில் பாவம் செய்ததன் விளைவாகவே புற்றுநோய் பாதிப்பு‌ ஏற்படுவதாக, அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோய் பாதிப்பு‌ குறித்து அமைச்சரின் இந்த பேச்சு நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதுடைய‌ ஒருவர்‌ புற்றுநோயால் பாதிக்கப்பட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ அது அவர்கள் முன்பு செய்த பாவத்திற்கான தண்டனை எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹிமந்த பிஸ்வா, சர்மா‌ புற்றுநோயாளிகள் மனம் நோகும்ப‌டி கருத்து தெரிவித்துள்ளதாகவும், இதற்காக அவர் பொதுவிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அமைச்சர் குறித்து ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், கட்சி மாறியதால் அவர் அப்படி பேசியதாக விமர்சித்தார். இதற்கு ட்விட்டரிலேயே பதிலளித்துள்ள அமைச்சர் ஹிமந்த பிஸ்வா இந்து மதம் கர்மாவை நம்புவதாகவும், கர்ம வினையாகவே வலி உண்டாகிறது என கூறப்பட்டிருப்பதைத்தான் தாம் எடுத்துரைத்ததாகவும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com