\
ஜார்க்கண்ட்: போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி - சிதறியோடிய மக்கள்

ஜார்க்கண்ட்: போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி - சிதறியோடிய மக்கள்

ஜார்க்கண்ட்: போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி - சிதறியோடிய மக்கள்
Published on

ஜார்க்கண்டில் போராட்டம் நடத்திய கிராம மக்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

கொல்ஹான் பகுதியில் உள்ளூர் இளைஞர்கள் 4 பேரை காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து கிராம மக்கள், இளைஞர்கள் ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டம் நடத்தினர். அதில் சிலர் காவல்நிலைய வெளிப்புற பகுதியை அடித்து நொறுக்கியதோடு கல்வீசி தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். இதனால் மக்கள் சிதறி ஓடிய நிலையில் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com