ஜிஎஸ்டி குறித்து நுகர்வோர் குறை ஏதும் கூறவில்லை என்றும் வணிகர்களில் ஒரு தரப்பினர் மட்டுமே புகார்கள் கூறி வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவி்த்துள்ளார்.
ஜிஎஸ்டி முறையில் வரிகள் நியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அருண் ஜேட்லி குடிமகன்கள் வரி செலுத்தக் கூடாது என்ற மன நிலை மக்களிடம் மாற வேண்டும் என்றும் தெரிவித்தார். வளர்ந்த நாடு என்ற நிலையிலிருந்து வளர்ச்சியடைந்த நாடு என்ற நிலைக்கு மாற இந்த மனமாற்றம் தேவை என்றும் கூறினார்.நுகர்வோர் குறை ஏதும் கூறவில்லை என்றும் வணிகர்களில் ஒரு தரப்பினர் மட்டுமே புகார்கள் கூறி வருவதாகவும் அருண் ஜேட்லி
தெரிவித்தார்.