பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி: வைரல் வீடியோ

பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி: வைரல் வீடியோ

பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி: வைரல் வீடியோ
Published on

உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாரை பொதுவெளியில் பெண்கள் கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மதுரா மாவட்டம் விருந்தாவன் பகுதியை சேர்ந்த பாபா பாசுதேவ் சாஸ்திரி எனும் சாமியார், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இரண்டு பெண் பக்தர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சாமியாரை அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இரண்டு பெரிய கம்புகளை வைத்து சாமியாரை பெண்கள் தாக்குகின்றனர். ஆனால் வலி தாங்க முடியாமல் அடிக்க விடாதபடி கம்பை பிடித்து சாமியார் தடுக்கிறார். இருப்பினும் ஆத்திரம் தீராத பெண்கள் மறுபடியும் சாமியாரை தாக்குகின்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சாமியாரை கைது செய்தனர்.

சாமியார் என சொல்லிக்கொண்டு பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த நபரை பெண்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com