\
‘பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்’ : நிதிஷ்குமார்

‘பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்’ : நிதிஷ்குமார்

‘பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்’ : நிதிஷ்குமார்
Published on

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்தி உண்மையை கண்டுபிடிக்கவேண்டும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ்குமார் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்துவதே சரியானதாக இருக்கும் என கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் பாஜகவுடன் கூட்டணி அரசை அமைத்துள்ளது. தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க பாஜகவின் ஆதரவு அவசியம் என்ற நிலையிலும் அவர் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பேசி இருப்பது கவனிக்கத் தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com