ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் அமைதியான முறையில் நடத்தி வரும் போராட்டம் பார்க்க அற்புதமாக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் அமைதியாக நடைபெறும் போராட்டத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக் ஆதரவு தெரிவித்துள்ளார். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை பார்க்க அற்புதமாக இருப்பதாகவும். தமிழக மக்கள் தங்களது உணர்வுகளை அமைதியான முறையில் தொடர்ந்து வெளிப்படுத்தவும் கோரிக்கை விடுத்துள்ளார். அமைதியான முறையில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்வது அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று ஷேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.