பேடிஎம் ஓனர் வாங்கிய சொகுசு பங்களா விலை இவ்வளவுதானா..?

பேடிஎம் ஓனர் வாங்கிய சொகுசு பங்களா விலை இவ்வளவுதானா..?

பேடிஎம் ஓனர் வாங்கிய சொகுசு பங்களா விலை இவ்வளவுதானா..?
Published on

பேடிஎம் நிறுவனத்தின் அதிபர் விஜய் சேகர் சர்மா சமீபத்தில் ரூ.82 கோடியில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார்.

டிஜிட்டல் சேவையில் முன்னணி நிறுவனமாக பேடிஎம் திகழ்கிறது. ரூபாய் மதிப்பிழப்பிற்கு பிறகு டிஜிட்டல் சேவையில்
பேடிஎம் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் இந்நிறுவனத்தை
தொடங்கியவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான விஜய் சேகர் சர்மா டெல்லியில் ரூ.82 கோடியில் புதிய பங்களா ஒன்றை
வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே ஆடம்பர ரியல் எஸ்டேட் சந்தையாக விளங்கும், டெல்லி கால்ஃப் லிங்க்ஸ் பகுதியில் விஜய்
சேகர் தனது புதிய வீட்டை வாங்கியுள்ளார். ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 1.3 பில்லியன் மதிப்புடன் விஜய் சேகர்
சர்மாவின் பெயரும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com