இ- சலான் அபராதம் கட்டவில்லை எனில்.... இனி லைசன்ஸ் ரத்து?
மூன்று மாதங்களுக்குள் இ - சலான் அபராதத் தொகையை செலுத்தாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யும் வகையிலன திட்டம் மத்திய அரசால் விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா போன்ற நாடுகளில் சாலை விபத்தால் உயிரிழந்து வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றனர். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாட்டில் 2023 ஆம் ஆண்டின்படி, 4.80 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடந்துள்ளதாகவும், இதனால் 1.72 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் .
இப்படி, சாலை விபத்துக்கள் நடப்பதற்கு முக்கிய காரணம், சாலை விதிகளை சரிவர கடைப்பிடிக்காமல் இருப்பதே. எனவே, இவற்றை தடுப்பதற்கு, சாலை விதி மீறல்களை கட்டுப்படுத்தும் விதமாக புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தப்படி கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது.
இதன்படி, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ₹10,000 அபராதம் மற்றும் அல்லது முதல் மீறலுக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். இதே தவறை தொடர்ந்தால், ₹15,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1,000 அபராதம் என அபராத தொகை கடுமையாக்கப்பட்டுள்ளது.இப்படி பல அபாரதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இ - சலான் முறையில் அபாரதம் விதிக்கப்படுவதால் பலரும் இந்த அபராத தொகையை கட்டாமல் விட்டுவிடுவதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் எண்டு- கார்டு போடும் வகையில்தான் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு தனது கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1) அதன்படி, இ சலான் மூலம் விதிக்கப்படும் அபராத தொகையை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும். இல்லையெனில், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். உதாரணமாக, ஒரு வாகன உரிமையாளருக்கு அவர் சாலை விதியை மீறும்பட்சத்தில் மூன்று நாட்களுக்குள் ஒரு மின் சலான் அறிவிப்பு அனுப்பப்படும். இதை 30 நாட்களுக்கும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த சலானில் ஏதாவது தவறு இருப்பின் அதிகாரியிடம் தெரியப்படுத்த வேண்டும். இல்லையெனில் ஏற்றுக்கொண்டதாக கருதப்படும். பிறகு, 90 நாட்களுக்குள் அபராத தொகை செலுத்தப்பட வேண்டும். செலுத்தாவிட்டால் ஓட்டுநர் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இடைநிறுத்தப்படும்.
2) ஒரு நிதியாண்டில் முன்று முறை வாகன விதிமீறலில் ஈடுப்பட்டால், 3 மாதங்கள் ஓட்டுநர் உரிமம் பறிமுதல் செய்யப்படும்.
3) முந்தைய நிதியாண்டில் 2 இ செலான் வைத்தால் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் மாற்றம் கொண்டுவரனும் திட்டமிடப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக நாட்டில் 40% இ- செல்லான் அபராதத் தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் டில்லியில் 14% இ-சலான் தொகை மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது என்றும், கர்நாடகத்தில் 21%, தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் 27%, ஒடிசா - 29%, ராஜஸ்தான், பிகார், மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரம், ஹரியாணாவில் அதிகமாக 62 -76% வரை இ- சல்லான் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.