பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் தீ விபத்து! மருத்துவமனையில் அனுமதி?
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் படிக்கும் பள்ளியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது ஆந்திர துணை முதலமைச்சராக இருக்கும் பவன் கல்யாண் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் ரஷ்யா நாட்டை சேர்ந்த அன்னா லெஸ்நேவா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகன் , மகள் உள்ளனர். இவரது மகன் சிங்கப்பூர் புறநகர் பகுதியில் 3 மாடி கட்டிடத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதே வளாகத்தில் சினிமா தியேட்டர் வளாகமும், ரோபோடிக் பயிற்சி மையமும் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில்தான் நேற்றைய தினம் ( 8.4.2025) திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மளமளவென தீ பரவ சம்பவ இடத்திற்கு விரைந்த தியணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். தீ விபத்தில் சிக்கிய 80 பேரை மீட்டுள்ளனர். இதில் மாணவி ஒருவர் உடல் கருகி பலியானதாக கூறப்படுகிறது.
பவன் கல்யாணின் மகனின் கை கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பற்றி எரிந்த தீ அதிகரித்தநிலையில், புகைமூட்டம் அதிகரித்துள்ளது. இந்த புகையை சுவாசித்ததால் இவரது மகனுக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கும்நிலையில், தற்போது சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.