'4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழை'- பாட்னா பல்கலை பேராசிரியரை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!

'4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழை'- பாட்னா பல்கலை பேராசிரியரை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!
'4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழை'- பாட்னா பல்கலை பேராசிரியரை ரோஸ்ட் செய்யும் நெட்டிசன்ஸ்!

பாட்னா பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கை ஒன்று நெட்டிசன்களால் பெரிதளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏனெனில் அந்த சுற்றறிக்கை முழுவதும் இலக்கண பிழையால் நிறைந்து உள்ளதால் மத்திய அரசின் செயலாளராலேயே கண்டிக்கப்பட்டிருக்கிறது.

பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தின் அனைத்து முனைவர் பட்ட அறிஞர்களும் தங்கள் வருகையைப் பதிவேட்டில் குறிக்குமாறு கேட்டு கடந்த ஜூன் 10ம் தேதி வேதியியல் துறையால் அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதனை வேதியியல் துறைத் தலைவர் டாக்டர் பினா ராணி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சுற்றறிக்கை நெட்டிசன்களின் ரோஸ்ட்டுக்கு காரணமாக அமைந்திருக்கிறது. மேலும் மத்திய இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளர் சஞ்சய் குமார் அந்த சுற்றறிக்கையை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில் ”பாட்னா பல்கலைக்கழகத்தின் துறைத் தலைவரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை இது. இதில் உள்ள இலக்கணமும், தொடரியல் முறையும் பயமுறுத்தும் வகையில் இருக்கிறது. கவனக்குறைவோ, திறமையின்மையோ எதுவாக இருந்தாலும் இதுதான் பீகாரின் உயர்கல்வியின் நிலையை வெளிப்படுத்துகிறது” எனக் குறிப்பிட்டு பீகார் மாநில கல்வித்துறையையும், பீகார் மாநில அமைச்சர் விஜய்குமார் சவுத்ரி மற்றும் கல்வித்துறை கூடுதல் செயலாளர் தீபக் குமார் சிங்கையும் டேக் செய்துள்ளார்.

இந்த ட்வீட்டை பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், ஒரு பல்கலைக்கழக பேராசிரியரின் தரம் இந்த நிலையில் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும், முதன்மையான பல்கலைக்கழகத்தின் HODயிடம் இப்படியான அறிக்கை வந்தது நம்பமுடியவில்லை என பதிவிட்டு வருகிறார்கள். சிலர் 4 வரி அறிக்கையில் 40 இலக்கண பிழையா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com