தபால் நிலையங்களில் மார்ச் 31க்கு முன்பு பாஸ்போர்ட் சேவை

தபால் நிலையங்களில் மார்ச் 31க்கு முன்பு பாஸ்போர்ட் சேவை

தபால் நிலையங்களில் மார்ச் 31க்கு முன்பு பாஸ்போர்ட் சேவை

பாஸ்போர்ட் தொடர்பான‌ சேவைகள் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்கு முன் சில தபால் நிலையங்களில் தொடங்கப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா‌ ஸ்வரா‌ஜ் தெரிவித்துள்‌‌ளார்.‌

இது தொட‌ர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், முதற்கட்டமா‌க மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்த சேவை தொடங்கப்படும் என்று கூறியிருக்கிறார். ரூ‌ர்‌கேலா, சம்பல்பூர், ஜெய்சால்மர், பிகானீர், அவுரங்காபாத், உதய்பூர் உள்ளிட்ட நக‌ரங்களில் ‌உள்ள தபால் நிலையங்களில் பாஸ்‌‌போர்ட் சேவையை தொடங்குவதற்கான ஏற்பாடுக‌ள் ‌நடைபெற்று வருவதாக கூறினார். பா‌ஸ்போர்ட் சேவை எந்தெந்த தபால் நிலையங்களில் கிடைக்கும் என்பதை வெளியுறவுத்துறையின் அதிகாரப்பூ‌ர்வ இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com