அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள்!

அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள்!

அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார்.. விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள்!
Published on

டெல்லியில் புறப்படத் தயாராக இருந்த விமானம் ஒன்றில் பயணி ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டார்.

சமீபகாலமாக விமானப் பயணத்தின் போது ஏற்படும் பிரச்சினைகள் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அந்த வகையில் விமானத்தில் வயதான் பெண் பயணி மீது மற்றொரு பயணி சிறுநீர் கழித்த விவகாரமும், பெங்களூரு பாஜக எம்.பி., தேஜஸ்வி சூர்யா எமர்ஜென்சி கதவைத் திறந்த விவகாரமும் சமீபத்தில் பேசுபொருளாகியது. அந்த வரிசையில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது.

டெல்லியில் இருந்து ஐதராபாத்துக்கு இன்று, SG-8133 என்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது டெல்லியில் ஏறிய பயணி ஒருவர், கேபின் குழுவினரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன், தகாத வார்த்தைகளாலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கேபின் குழுவினர் விமானப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்தப் பயணியும் அவருடன் பயணம் மேற்கொள்ள வந்த சக பயணியும் விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டதுடன், பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

- ஜெ.பிரகாஷ்

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com