ஏர் இந்தியா
ஏர் இந்தியாமுகநூல்

விமான நிலையத்திலேயே வைக்கப்பட்ட பயணிகளின் உடைமைகள்; பொறுப்பற்ற முறையில் பதிலளித்ததா ஏர் இந்தியா?

குவைத்தில் இருந்து சென்னை திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், தங்கள் உடைமைகள் இன்னும் தரப்படவில்லை என விமான நிறுவனம் மீது பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Published on

குவைத்தில் இருந்து சென்னை திரும்பி நான்கு நாட்கள் ஆகியும், தங்கள் உடைமைகள் இன்னும் தரப்படவில்லை என விமான நிறுவனம் மீது பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

குவைத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் கடந்த திங்கள்கிழமை 176 பயணிகள் சென்னை வந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு அவர்களது உடைமைகள் வழங்கப்படவில்லை.

 ஏர் இந்தியா
Headlines: ரசிகர்களுக்கு அஜித்தின் வேண்டுகோள் முதல் L&T-க்கு ஆனந்த் மஹிந்திராவின் கிண்டல் பதில் வரை!

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் பயணிகள் கேட்டபோது, நிர்ணயிக்கப்பட்டதை விட அதிகளவு எடையில் உடைமைகள் இருந்ததால் குவைத்திலேயே அவற்றை விட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள், விமான நிறுவனம் பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com