நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி!

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி!

நடுவானில் விமானத்தின் கதவைத் திறந்த பயணி!
Published on

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் கதவை திறக்க முயன்றவரால் பயணிகள் பீதி அடைந்தனர்.

கடந்த சனிக்கிழமை டெல்லியில் இருந்து பாட்னாவுக்கு, ஜி8 149 என்ற எண் கொண்ட கோ ஏர் (GoAir) விமானம் சென்றுகொண்டிருந்தது. விமானத்தில் 150 பயணிகள் இருந்தனர். விமானம் நடுவானில் பயணித்துக்கொண்டிருந்தபோது பின் பக்கக் கதவின் அருகில் நின்று ஒரு பயணி ஏதோ செய்துகொண்டிருந்தார். இதைத் தற்செயலாக மற்றொரு பயணி கவனித்து அதிர்ச்சி அடைந்தார். இதை விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்தார். உடனடியாக வந்த அவர்கள், அவரை பிடித்து தனியாக அமர வைத்தனர்.

பாட்னாவில் விமானம் தரையிறங்கியதும் அவரை மத்திய தொழில் பாதுகாப்புப்படையினரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரித்ததில், முதல் முறையாக விமானத்தில் பயணிப்பதாகவும் கழிவறைக்குப் பதிலாக விமானத்தின் கதவை தவறுதலாக திறக்க முற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை கோ ஏர் விமானம் தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com