தனிநபர் தகவல்களை கசியவிட்டதாக ஏர் இந்தியாவிடம் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் பயணி

தனிநபர் தகவல்களை கசியவிட்டதாக ஏர் இந்தியாவிடம் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் பயணி
தனிநபர் தகவல்களை கசியவிட்டதாக ஏர் இந்தியாவிடம் ரூ.30 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் பயணி

தனது தனிநபர் தகவல்களை கசிய விட்ட காரணத்திற்காக ஏர் இந்தியா விமான நிறுவனத்திடம் பயணி ஒருவர் 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சட்டப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சுமார் 45 லட்ச பயணிகளின் தனிநபர் தகவல்கள் கசிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் ரித்திக்கா ஹண்டூ மற்றும் அவரது கணவரின் தனிநபர் தகவல்கள் பகிரப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

“பெயர், பிறப்பு விவரம், தொடர்பு எண், பாஸ்போர்ட் விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்கள், பயணியின் விமான பயண விவரங்கள் என அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. தெரிந்தே, வேண்டுமென்றே இந்த தகவல்கள் பகிர்ந்துள்ளன. 2011 தொடங்கி 2021 பிப்ரவரி வரையிலான காலத்தில் பயணம் செய்த பயணிகளின் தகவல்கள் கசிந்துள்ளன. 

தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பு உரிமையை மீறியமைக்காக 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளேன்” என ரித்திக்கா ஹண்டூ தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com