மும்பை ரயில் இருக்கையில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ந்துப்போன பயணி!

மும்பை ரயில் இருக்கையில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ந்துப்போன பயணி!
மும்பை ரயில் இருக்கையில் கிடந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறை.. அதிர்ந்துப்போன பயணி!

குறைந்த விலையில் ஒரு டீசன்ட்டான பயணத்தை ரயில் போக்குவரத்து கொடுக்கும் என்று மக்கள் எப்போதும் கூறப்படுவதுண்டு. ஆனால் எல்லா சமயங்களிலும் ரயில் பயணங்கள் அலாதியான இன்பங்களையும், உணர்வுகளையும் கொடுத்து விடாது என்பதை மும்பையில் நடந்த சம்பவம் உணர்த்தியிருக்கிறது என்றே சொல்லலாம்.

அம்பர்நாத் ரயிலின் இருக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆணுறை ஒன்று பட்டவர்த்தனமாக கிடந்திருந்த நிகழ்வு பயணிகள் பலரையும் அதிர்ச்சிக்கும் திகைப்புக்கும் ஆழ்த்தியிருக்கிறது.

சம்பவத்தின்படி மும்பையின் Currey Road-ஐ கடக்கும் போது அம்பர்நாத் லோக்கல் ட்ரெயின் இருக்கையில் ஆணுறை இருந்ததை பயணி ஒருவர் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மும்பை மத்திய ரயில்வே நிர்வாகம், இந்தியன் ரயில்வே, மத்திய ரயில்வே ஆகியவற்றை டேக் செய்து நடவடிக்கை எடுக்கச் சொன்னதோடு, மும்பை ரயில் பயணிகளை எச்சரிக்கும் விதமாக அதற்கான ட்விட்டர் பக்கத்தையும் டேக் செய்திருக்கிறார்.

அதில், கடந்த ஜனவரி 23ம் தேதி இரவு 9.40 மணிக்கு அந்த ஆணுறையை ரயிலின் சீட்டில் பார்த்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இந்த விவகாரம் குறித்து விசாரிக்கும் படி மும்பை ரயில்வே போலீசாருக்கு உத்தரவிட்டிருக்கிறது மும்பை பிரிவுக்கான மத்திய ரயில்வே நிர்வாகம்.

ரயில் இருக்கையில் ஆணுறை கிடந்த அந்த பதிவை கண்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளானதோடு, இதன் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்கள். மேலும், எப்படி ஒரு பொது போக்குவரத்தில் இப்படியான செயலில் ஈடுபட்டிருக்க முடியும் என்றும் கேள்விகளை முன்வைத்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com