paru eagles safety and govt bans nimesulide banned
பாறு கழுகுகள்எக்ஸ் தளம்

பாறு கழுகுகள் அழிவைத் தடுக்க 'NIMESULIDE' மருந்துக்குத் தடை!

பாறு கழுகுகள் அழிவைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் NIMESULIDE மருந்துக்கு தடை விதித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
Published on

பாறு கழுகுகள் அழிவைத் தடுக்கும் வகையில் இந்தியாவில் NIMESULIDE மருந்துக்கு தடை விதித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

paru eagles safety and govt bans nimesulide banned
paru eaglesx page

Nimesulide மருந்து கால்நடைகளின் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த மருந்து பயன்படுத்தப்பட்ட கால்நடைகள் இறந்த பிறகு, அவற்றின் உடல்களை உண்ணும் பாறு கழுகுகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகின. அதனுடன் தொடர்புடைய பறவைகளும் அழிந்து வருவது, Nimesulide எனும் மருந்தால் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கால்நடைகளுக்கு நோய் நிவாரணமாகப் பயன்படுத்தப்பட்ட இந்த மருந்தின் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோகத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தடை செய்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை, பாறு கழுகுகளைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சமநிலையை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

paru eagles safety and govt bans nimesulide banned
13 ஆண்டுக்கு முன் தடை செய்யப்பட்ட மருந்து.. இப்போதும் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் அவலம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com