38 கட்சிகளை ஒன்று சேர்த்துள்ள பாஜக; எதிர்க்கட்சிகளுக்கு போட்டியாக இன்று டெல்லியில் ஆலோசனைக் கூட்டம்!

பெங்களூருவில் நடைபெற்று வரும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பாஜகவும் இன்று தங்களது ஆதரவுக் கட்சிகளைக் கூட்டி ஆலோசனை நடத்த இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும், தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளான அதிமுக, தமிழ்மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு தொடங்கி ஒற்றுமையுடன் தேர்தலை அணுகுவது வரை பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com