ஆப்பிள் மூத்த அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணையை மேற்கொள்ளுமா?-அடுத்து நடக்கப்போவது என்ன?

ஆப்பிள் விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி. துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனியாக ஒரு விசாரணையை நடத்துமா என்கிற கேள்வி நீடிக்கிறது.
ஆப்பிள்
ஆப்பிள்pt web

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுடைய ஐபோன் உளவு பார்க்கப்படுவதாக புகார் அளித்துள்ள நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி தொலைத்தொடர்பு மற்றும் ஐ. டி. துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதாப் ஜாதவ்
பிரதாப் ஜாதவ்

ஆப்பிள் விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கனவே விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் ஐ.டி. துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தனியாக ஒரு விசாரணையை நடத்துமா என்கிற கேள்வி நீடிக்கிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளதால் நாடாளுமன்ற ஐ.டி. குழுவின் தலைவரான பிரதாப் ஜாதவ் உடனடியாக ஆப்பிள் அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர்கள் மல்லிகார்ஜுன் கர்கே, கே.சி வேணுகோபால், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் ஆகியோரின் ஐபோன்களை உளவு பார்க்க முயற்சி நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தனது அலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கும் உளவு முயற்சி தொடர்பான எச்சரிக்கை செய்திகள் வந்துள்ளன என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் குற்றம் சாட்டியுள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் எம்பி. மகுவா மோய்த்ரா,சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி ஆகியோரின் ஐபோன்களும் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இது தொடர்பாக எச்சரிக்கை செய்தி அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ள இவர்கள், மத்திய அரசு உளவு பார்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர். ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதுவரை தொலைதொடர்பு மற்றும் ஐ.டி. துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான பிரதாப் ஜாதவ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதால் இந்த விவகாரத்தில் குழப்பம் நிலவுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com