நவ.20ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

நவ.20ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?
நவ.20ல் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்?

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி வாக்கில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை டிசம்பர் மாத இறுதியில் முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 20ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடர் 20 நாட்களுக்கு மேல் நடைபெறும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. கூட்டத்தொடரின் தேதி குறித்து, அமைச்சரவைக் குழு ஆலோசித்து இறுதி முடிவை அறிவிக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தொடரின் போது பொருளாதார நிலை, ஜி.எஸ்.டியின் தாக்கங்கள் உள்ளிட்ட விவாதங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com