பதவி நிறைவுசெய்யும் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார நிகழ்வு

பதவி நிறைவுசெய்யும் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார நிகழ்வு
பதவி நிறைவுசெய்யும் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபச்சார நிகழ்வு

குடியரசுத் தலைவராக இருந்து பதவி நிறைவு செய்யும் ராம்நாத் கோவிந்த்-க்கு டெல்லியில் இன்று பிரிவு உபச்சார விழா நடைபெறுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் 14-வது குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற ராம்நாத் கோவிந்துடைய பதவிக்காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து அவருக்கான பிரிவு உபச்சார விழா இன்று டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடத்தப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பிரிவு உபச்சார விருந்து வழங்குகிறார்.

இந்த விருந்து வழங்கும் நிகழ்ச்சியில் அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லி சென்றுள்ள அவருடன், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் எஸ்.பி வேலுமணி, தளவாய் சுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சிவி சண்முகம் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்.

வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கி மாநில ஆளுநராக உயர்ந்து நாட்டின் முதல் குடிமகனாக 5 ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ள ராம்நாத் கோவிந்துக்கு இந்தப் பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் அனைத்து தலைவர்களும் மரியாதை தெரிவிக்கவுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com