எதிர்க்கட்சி உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற குழு, லடாக்கில் பதற்றம் நிறைந்த லே பகுதியில் இம்மாத இறுதியில் ஆய்வு செய்கிறது.
சீனாவுடனான எல்லை பிரச்னை காரணமாக லடாக்கில் உள்ள லே பகுதி, பெரும் பதற்றம் கொண்ட பகுதியாக தொடர்ந்து இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான சிஏஜி அறிக்கையில், லே போன்ற கடுமையான இடங்களில் பணிபுரியக்கூடிய வீரர்களுக்கு தரமான பாதுகாப்பு உடைகள், உணவு மற்றும் பனிச்சறுக்கு வாகனங்கள் ஆகியவை சரியாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் அதிரன் சவுதிரி தலைமையிலான எதிர்க்கட்சிக் எம்பிக்களை கொண்ட குழு , லடாக் பகுதியில் ஆய்வு நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அனுமதி கோரியிருந்தார். அனுமதி கிடைத்துள்ள நிலையில் அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற குழு லே பகுதியில் நேரில் ஆய்வு நடத்துகிறது.
ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடன் மட்டுமல்லாமல் ராணுவ வீரர்கள் இடமும் அவர்களுக்கு கிடைக்கக்கூடிய உணவு, பாதுகாப்பு கவசங்கள் உள்ளிட்டவற்றை குறித்து ஆய்வு நடத்துவார்கள் என சொல்லப்படுகின்றது.