மழைக்கால கூட்டத் தொடரில் 47 மசோதாக்கள் !

மழைக்கால கூட்டத் தொடரில் 47 மசோதாக்கள் !
மழைக்கால கூட்டத் தொடரில் 47 மசோதாக்கள் !

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மொத்தம் 47 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய‌ அரசு திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்கி வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை இடைவிடாமல் 18 நாட்களுக்கு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக்குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் நடப்பு கூட்டத்தொடரில் மொத்தம் 47 மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்றம் கூடாத நிலையில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களை, சட்டமாக இயற்றும் வகையில் 11 மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதா, வங்கிகள் ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதா, பெருந்தொற்று நோய் சட்ட திருத்த மசோதா, எம்.பி.க்களின் ஊதிய திருத்த மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள் இவற்றில் அடங்கும்.

இந்தக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com