கூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா ?

கூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா ?
கூடுகிறது நாடாளுமன்றம் : முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா ?

நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 18-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில் ஜூலை மாதம் 18-ம் தேதி கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அமைச்சர் அனந்த் குமார் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற இந்த கூட்டத்தொடர் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்நிலையில் முத்தலாக் மசோதாவுக்கு சோனியா, மமதா மற்றும் மாயாவதி ஆகியோர் ஆதரவளிக்க வேண்டும் என சட்டத்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் எதிர்கட்சிகள் சார்பில் ஆளுநர்களின் தலையீடு, பசுக் குண்டர்கள் அத்துமீறல், மாநில சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட உள்ளது. இதனிடையே மத்திய அரசு அனைத்திற்கும் விவாதம் மூலம் தீர்வு காண தயாராக உள்ளதாகவும் அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்துள்ளர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com