நாடாளுமன்ற தேர்தல்: பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறுதி?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது.
பாஜக - த.மா.கா
பாஜக - த.மா.காமுகநூல்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துவரும் நிலையில் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் உறுதியாகியுள்ளது.

ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருக்கின்றனர். அந்தவகையில் திமுக தனது கூட்டணி குறித்த முடிவுகளை தெரிவித்துள்ளது. மேலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை தொடங்க காத்து கொண்டிருக்கிறது.

அதிமுகவின் கூட்டணி பாஜகவுடனா? என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் ,அதிமுக அதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் பாஜக - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிடுவார் என்று தெரிகிறது. முன்னதாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன் ’யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் தெரிவிப்பேன்’ என்ற கூறி இருந்தார்.அந்தவகையில் தற்போது இந்த தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக - த.மா.கா
மக்களவை தேர்தல்: திருவள்ளூர் தொகுதி குறித்த ஓர் அலசல்! யாருக்கு சாதகம்?

மேலும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகளை இணைத்து கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கிய த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியுடன் சந்தித்து பேசினார்.அதில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு 3 தொகுதிகள் கேட்டதாக தெரிகிறது. அது மறக்கப்பட்டதால் இந்த முடிவினை எடுத்துள்ளார் என்று தகவல்கள் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com