நாடாளுமன்றம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்ததால், நாடாளுமன்ற வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது மக்களவையில் ஆவேசமாக பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்னர் பிரதமர் மோடியை கட்டியணைத்ததும், இருக்கையில் அமர்ந்தவாறு அவர் கண் சிமிட்டியதும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, மறுபுறம் நாடாளுமன்றத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் நாடாளுமன்ற வளாகத்திலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அந்தக்காட்சி தண்ணீருக்கு நடுவே கட்டப்பட்ட கோட்டைபோல நாடாளுமன்றத்தை மாற்றியுள்ளது. அந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகிறது. தற்போது மழை நீரை நாடாளுமன்ற ஊழியர்கள் மோட்டார்களை பயன்படுத்தி வெளியேற்றி வருகின்றனர்.