நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் - டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர்
பட்ஜெட் கூட்டத்தொடர் கோப்புப்படம்

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்க உள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி, மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

கோப்புப்படம்
பட்ஜெட் கூட்டத்தொடர்
காலை தலைப்புச் செய்திகள் |இடைக்கால பட்ஜெட் கூட்டம் முதல் சர்ஃபராஸ் கானின் டெஸ்ட் வாய்ப்பு வரை!

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட் என்பதால், இதில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் மீதான விவாதம், பிப்ரவரி 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், கூட்டத்தொடரின் போது முன்னெடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, அதற்கு ஒத்துழைப்பு அளிக்க எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com