எதிர்க்கட்சிகளின் அமளியால் இன்று இரு அவைகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும் மதியம் 2.30 மணி வரை மாநிலங்களவையும் மற்றும் மக்களவை பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 6-ம் தேதி தொடங்கி்யது. இந்தக் கூட்டத்தொடரில் அரசு பல்வேறு சட்டங்களை தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், தொடர் அமளியின் காரணமாக அவைகள் முடங்கியது. இன்று மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகயின் எம்.பிக்களின் தொடர் முழக்கம் காரணமாக அவையில் அமளி நிலவியது. இதைத்தொடர்ந்து இன்று மாநிலங்களவை மதியம் 2.30 மணி வரையிலும், மக்களவை பகல் 12 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

