\
Parliament
Parliament web

3வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்.. மக்கள் வரிப்பணத்தில் கோடிகள் இழப்பு.! செலவினம் விவரம்

நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான செலவு ஒரு மணி நேரத்திற்கு சுமார் ₹1.5 கோடியாகவும், ஆறு மணி நேர வேலை நாளுக்கு ஏறக்குறைய ₹9 கோடி செல்வாகிறது.
Published on
Summary

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 13 வரை நடைபெறும் மழைக்காலக் கூட்டத்தொடரில், முதல் நாளிலிருந்தே எம்.பி.க்களின் அமளி காரணமாக இரு அவைகளும் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஒத்திவைக்கப்படுகின்றன. அரசியல் கருத்து வேறுபாடுகளால் உருவாகும் இந்த இடையூறுகள், சட்டப்பணிகளை முடக்குவதோடு, நிமிடத்திற்கு ₹2.5 லட்சம், மணி நேரத்திற்கு ₹1.5 கோடி என மக்களின் பணத்தை வீணடிக்கின்றன.

செய்தியாளர் - M. மீரா

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாளில் எம்.பி.கள் அமளியில் ஈடுபட்டிருந்த நிலையில், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலில் 3 வது நாளும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இத்தகைய தொடர் இடையூறுகள் பெரும்பாலும் அரசியல் கருத்து வேறுபாடுகளின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், இவற்றால் கணிசமான நிதி இழப்பு ஏற்படுகிறது. அவை ஒத்திவைக்கப்படும் ஒவ்வொரு முறையும், சட்டமியற்றும் பணிகள் முடங்கியிருந்தாலும் மக்கள் பணம் தொடர்ந்து செலவிடப்படுகிறது.

Parliament
Parliament web

அறிக்கைகளின்படி, நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு நிமிடத்திற்கு சுமார் ரூ. 2.5 லட்சம் செலவாகிறது. இந்தத் தகவல் முதன்முதலில் 2012-ஆம் ஆண்டில், அப்போதைய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சரான பவன் குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

2023-ஆம் ஆண்டில், மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி. ஆச்சார்யா இதே மதிப்பீட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். கட்டிடப் பராமரிப்பு, மின்சாரம், தண்ணீர், பாதுகாப்பு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள், பணியாளர் செலவுகள், போக்குவரத்து, உணவு மற்றும் பிற நேரடி மற்றும் மறைமுகச் செயல்பாட்டுச் செலவுகள் ஆகியவை இதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். .

நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்படும்போதெல்லாம், அதற்கான நிதிச் சுமை நிற்காது. இரு அவைகளும் சட்ட மசோதாக்கள் குறித்து விவாதித்தாலும் சரி அல்லது ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி, நாடாளுமன்றத்தை நடத்துவதற்கான செலவுகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

Parliament
Parliament web

பொதுவாகக் குறிப்பிடப்படும் மதிப்பீட்டின்படி, இடையூறுகளால் வீணாகும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுமார் ₹1.5 கோடி செலவாகிறது; அதேவேளையில், ஒத்திவைப்புகளால் ஒரு முழு நாளும் வீணாகும் பட்சத்தில் அதாவது 6 மணி நேரத்துக்கு அந்தச் செலவு கிட்டத்தட்ட ₹9 கோடியை எட்டுகிறது.

ஒரு முழு கூட்டத்தொடர் முழுவதும் இடையூறுகள் நீடித்தால், வீணான மணிநேரங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, இதனால் ஏற்படும் இழப்பு (மதிப்பீட்டு ரீதியாக) பல கோடி ரூபாய்கள் செலவாகும் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

parliament
parliament web

முழு அமர்வுக்கான கட்டணம் - நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முழுமைக்கும் கணக்கிடும்போது இதற்கான செலவு மேலும் அதிகரிக்கிறது.

அவை கூடும் நாட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, ஒரு கூட்டத்தொடருக்கான செலவு ₹140 கோடி முதல் ₹200 கோடி வரையோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருக்கலாம்; இது நிமிடத்திற்கு ₹2.5 லட்சம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. 15 முதல் 20 நாட்கள் நடைபெறும் கூட்டத்தொடருக்கு சுமார் ₹135 கோடி முதல் ₹180 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் நாட்கள் அவை கூடும் பட்சத்தில் இச்செலவுத் தொகை அதிகரிக்கும்.

Parliament
CJPக்கு ஆதரவு.. பிரதமர் மோடி இல்லம் அருகே போராட்டம்.. ராகுல்காந்தி அதிரடி கைது!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com