\
ரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

ரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு

ரபேல் மற்றும் மேகதாது அமளியால் இரு அவைகளும் ஒத்திவைப்பு
Published on: 

ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் மற்றும் மேகதாது அணை விவகாரத்தால் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. இதன் காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

பரபரப்பான சூழலுக்கு நடுவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாள், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி, மத்திய அமைச்சர் அனந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து, இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் 7 ஆம் நாளான இன்று, மக்களவை கூடியதும் மேகதாது விவகாரத்தை எழுப்பி அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவையிலும் ரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் தொடர்பாக எதிர்கட்சியினரும், மேகதாது அணை விவகாரம் பற்றி அதிமுக எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, பல விவகாரங்களை எழுப்பி பிற கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கெனவே கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவையை நடத்தவிடாமல் அதிமுக எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல், இந்தக் கூட்டத் தொடரில் மேகதாது அணை விவகாரத்தை அதிமுக கையிலெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com