இத்தாலி | மோடியின் மிட்டாய் பரிசு வைரல்.. Parle பங்குச் சந்தை அதிரடி உயர்வு!
மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 5 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார் . பிரதமர் தனது அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணத்தின் இறுதிக் கட்டமாக மே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இத்தாலி சென்றார். ரோம் நகருக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ரோம் நகரில் இத்தாலிய பிரதமர் ஜார்ஜியா மெலோனியை இரவு உணவின்போது சந்தித்த பிரதமர் மோடி, அதனைத் தொடர்ந்து கொலோசியத்தை பார்வையிட்டார்.
இந்த பயணத்தின் போது, இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு பார்லேயின் ஒரு பாக்கெட் மெலடி மிட்டாய்களைப் பரிசளித்திருந்தார். இது தொடர்பான ஒரு வீடியோவை இத்தாலி பிரதமர் தனது X தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, இந்த வீடியோ வைரலானதுடன் மெலடி மிட்டாய் பரிசும் வைரலானது. இந்த சூழலில் தான், பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் தற்போது உயர்ந்துள்ளது.
அதன்படி, பார்லே இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் வர்த்தகத்தில் 5% உயர்ந்து ரூ. 5.25-ஐ எட்டியது. கடந்த ஒரு வாரத்தில் இந்தப் பங்கு கிட்டத்தட்ட 7% உயர்ந்துள்ளது .

