ஆந்திராவில் உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை அடித்துத் துன்புறுத்தும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சங்கவாக்கா கிராமத்தில் அரசு உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் கோடீஸ்வரராவ்.
இந்நிலையில், அங்கு பயிலும் மாணவ, மாணவிகளை கோடீஸ்வரராவ் தனது அறைக்கு வரவழைத்து சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டனர்.