இந்தியா
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோருக்கு சிறை
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாவிட்டால் பெற்றோருக்கு சிறை
உத்தரப்பிரதேசத்தில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பாத பெற்றோர் உணவு, தண்ணீர் இல்லாமல் ஐந்து நாட்கள் காவல்நிலையத்தில் அடைக்கப்படுவார்கள் என்று அம்மாநில அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். இவர் கட்சி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஏழை எளிய மக்களின் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்படவில்லை என்றால் அவர்களது பெற்றோரை தண்டிக்கும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்று கூறினார். மேலும் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கவும் தாம் தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இத்தகைய கருத்தை கேட்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அமைச்சர் ஓம் பிரகாஷ் கூறியுள்ள இக்கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.