பரப்பன அக்ரஹாரா சிறையில் பெண்கைதிகள் தனிப்பிரிவில் அடைக்கப்படுவர்.
ஒரு அறைக்கு 3 கைதிகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டியிருக்கும். பொதுவாக ஒருவர் சிறைக் கைதியாக பதிவு செய்யப்பட்டவுடன் அவருக்கு அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் சில அவசிய பொருட்கள் வழங்கப்படும். இதன்படி 3 சேலைகள், ஒரு குவளை, ஒரு டம்ளர், ஒரு தட்டு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும்.
பெண் கைதிகள் சிறை விதிகள் படி மெழுகுவர்த்தி செய்தல், ஊதுபத்தி செய்தல், நெசவு நெய்தல் ஆகிய பணிகளில் ஒன்றை செய்ய வேண்டியிருக்கும். இதற்காக ஒரு நாளைக்கு 50 ரூபாய் ஊதியமாகவும் வழங்கப்படும். இந்த பணத்திற்கு ஈடான கூப்பன்கள் வழங்கப்படும். இதைக் கொண்டு சிறையில் உள்ள கடையில் தேவையான பொருட்களை கைதி வாங்கிக் கொள்ளலாம். இது தவிர காலை 6.30, பகல் 11.30, மாலை 6.30 ஆகிய நேரங்களில் உணவு வழங்கப்படும்.
இது தவிர மாலை 4 மணிக்கு தேநீரும் வழங்கப்படும்.