குஜராத்: துணை ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - சக வீரர் வெறிச்செயல் - என்ன காரணம்?

குஜராத்: துணை ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - சக வீரர் வெறிச்செயல் - என்ன காரணம்?
குஜராத்: துணை ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - சக வீரர் வெறிச்செயல் - என்ன காரணம்?

குஜராத்தில் தேர்தல் பணியில் இருந்த சக துணை ராணுவ வீரர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதனையடுத்து, அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குஜராத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த துணை ராணுவ வீரர் ஒருவர் தன்னுடன் பணியில் இருந்த 2 சக ராணுவ வீரர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

குஜராத்தின் போர்பந்தர் அருகே உள்ள நவி பந்தர் கிராமத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய துணை ராணுவப் படையைச் சேர்ந்த தோய்பா சிங் மற்றும் ஜிதேந்திர சிங் என்கிற இரண்டு வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இனவுச்சாசிங் என்ற ராணுவ வீரரே சக வீரர்களை ஏகே-47 துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் இரு ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக 150 கிமீ தொலைவில் உள்ள ஜாம்நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பணியில் சுறுசுறுப்பாக இல்லாததால் எழுந்த மோதலில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக கூறப்படும் நிலையில், மோதலுக்கான விரிவான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போர்பந்தர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்: குஜராத் தேர்தலில் கிரிமினல் வேட்பாளர்கள் இவ்வளவு பேரா? - முதலிடம் எந்த கட்சிக்கு தெரியுமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com