”உதயநிதி ஸ்டாலின் தலைக்கு ரூ.10 கோடி” - துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவிப்பு!

”உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி” என துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், பரம்ஹன்ஸ் ஆச்சார்யா
உதயநிதி ஸ்டாலின், பரம்ஹன்ஸ் ஆச்சார்யாட்விட்டர்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய சனாதன குறித்த பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளது. இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலரும் அவருக்கு எதிராகக் கண்டனங்களைப் பதிவு செய்து வருவதுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்கவும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

”சனாதனம் குறித்த கருத்தை உதயநிதி வாபஸ் பெறாவிட்டால், மகாராஷ்டிராவிற்குள் நுழைய முடியாது” என அம்மாநில அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா எச்சரித்துள்ளார். எனினும் சனாதனம் குறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதுதொடர்பான வழக்குகளைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ’உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி’ என அயோத்தியைச் சேர்ந்த துறவி பரம்ஹன்ஸ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை வாளால் கிழித்து தீயிட்டு கொளுத்தும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

முன்னதாக, முதல்வர் கருணாநிதியின் தலையை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும்; அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்று ராம்விலாஸ் வேதாந்தி 2007 ஆம் ஆண்டு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ராமர் குறித்தும் ராமர் பாலம் குறித்து பேசிய விவகாரத்தில் அவர் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com