“மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆபத்து...” - கடுமையாக விமர்சித்த நிர்மலா சீதாராமனின் கணவர்!

“மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
 பரகலா பிரபாகர்
பரகலா பிரபாகர் PT

சென்னை சிந்தனையாளர் அமைப்பு சார்பில், தேசிய அளவில் நிலவும் அரசியல் சூழல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, முத்தமிழ் பேரவையின் கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் மூத்த பத்திரிகையார் இந்து என்.ராம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார வல்லுநருமான பரகலா பிரபாகர், மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

அப்போது பேசிய பரகலா பிரபாகர், "உலகின் மிகப்பெரிய கட்சி என கூறப்படும் பாஜகவில் சிறுபான்மை சமூகமான இஸ்லாமியத்தை சேர்ந்த ஒருவர் கூட அமைச்சராக இல்லை. மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

 பரகலா பிரபாகர்
“மீண்டும் மோடி வந்தால் இந்திய வரைபடமே மாறும்” - நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் எச்சரிக்கை!

தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிகையார் என்.ராம், ”பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் ஊடகங்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களின் சுதந்திரத்தையும் மத்திய பாஜக அரசு பறித்துவிட்டது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி, பிரதமர் மோடி ராமர் கோயிலை வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டுள்ளார்” என்று குற்றஞ்சாட்டி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com