ஒரு கிலோ தக்காளி ரூ. 1000: மக்களை ஏமாற்றிய போலி சாமியார்
காய்கறி விலைகளை ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்கு விற்று பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற போலி சாமியார் ராம் ரஹிம் சீடர்களை ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றவர் ராம் ரஹிம். தற்போது சிறையில் உள்ள அவர் காய்கறிகளை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்து வந்துள்ளார். 700 ஏக்கப் பரப்பளவில் காய்கறி, மற்றும் தோட்டத்தை அமைத்துள்ள ராம் ரஹிம் அதிலிருந்து அறுவடை செய்யப்படும் காய்கறிகளை சீடர்களுக்கு விற்று வந்துள்ளார். இதுவரை நூறுமுறை காய்கறி கண்காட்சிகளை நடத்தி வந்த அவர், அதனை நூறு மடங்கு அதிக விலைக்கு விற்று வந்துள்ளார். அந்த காய்கறிகள் சிரப்பு பூஜைகள் மூலம் வளர்க்கப்பட்ட கடவுளின் ஆசிர்வாதத்தால் வளர்ந்தவை எனக் கூறியுள்ளார். இந்த காய்கறிகளை சாப்பிட்டால் கடவுளின் அடைய முடியும் எனக் கூறியுள்ளார். அதனை நம்பிய சீடர்களிடம் அதிக விலைக்கு விற்றுள்ளார். ஒரு பப்பாளியின் விலை 5000 ரூபாய்க்கும், ஒரே ஒரு மிளகாயின் விலை 1000 ரூபாய்க்கும், ஐந்து கிராம் பட்டாணியை 1000 ரூபாய்க்கும், 2 தக்காளி 1000 ரூபாய்க்கும் விற்றுள்ளார். இன்னும் பல காய்கறி, பழங்களை அவர் நூறு மடங்கு அதிக விலை வைத்து விற்று சீடர்களை ஏமாற்றியது தற்போது தெரிய வந்துள்ளது.