\
பான் - ஆதார் எண்கள் இணைப்பு : கால அவகாசம் நீட்டிப்பு

பான் - ஆதார் எண்கள் இணைப்பு : கால அவகாசம் நீட்டிப்பு

பான் - ஆதார் எண்கள் இணைப்பு : கால அவகாசம் நீட்டிப்பு
Published on

பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் 2020 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரியை செலுத்துவதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய நேரடி வரி ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்காக 2019ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 21, 2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரி ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு சென்றும், பான் எண் மற்றும் ஆதார் எண்ணை, அதிகாரப்பூர்வ செல்போன் எண்ணில் இருந்து மெசெஜ் மூலம் இணைக்கலாம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com