பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நாளை மறுநாள் முடிவடைகிறது.
வருமானக் கணக்கு தாக்கலுக்கான பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மார்ச் 31ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு, செப்டம்பர் 30ஆம் தேதியை மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அதற்கான கெடு நாளை மறுநாள் முடிவடையவுள்ளது. ஏற்கனவே காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் தரப்படாது என மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே, நாளை மறுநாளுக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கத் தவறுவோரின் பான் கார்டு பயனற்றுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் புதிதாக பான் கார்டு விண்ணப்பித்துப் பெற நேரிடும் நிலையில், ஆதார் எண் அப்போது விண்ணப் பத்தில் தெரிவிக்க வேண்டியிருக்கும். பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது எளிது. வருமான வரித் துறை இணைய தளத்தில் லிங்க் ஆதார் என்ற பிரிவில் சென்று பான் எண்ணையும், ஆதார் எண்ணையும் பதிவிட்டால் சில நிமிடங்களில் பணி முடிந்து விடும்.