பாலக்காடு: கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்; போலீஸ் விசாரணை

பாலக்காடு: கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்; போலீஸ் விசாரணை
பாலக்காடு: கம்யூனிஸ்ட் கட்சி செயல் வீரரை வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பல்; போலீஸ் விசாரணை

பாலக்காட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல் வீரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிபிஐஎம் செயல்வீரர் ஷாஜகான். கட்சியில் இணைந்து கட்சி பணிகளிலும், பொதுமக்களுக்கான சேவையிலும், ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் ஷாஜகான் பாலக்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்திருந்த ஷாஜகானை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஷஜகான் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பாலக்காடு காவல்துறையினர். மூவரை பிடித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com