\
Pakistan’s $40 Billion Loss: Will Trade With India Resume?
கோப்புபடம்Reuters

இந்தியாவுடனான 7 ஆண்டு வர்த்தகத் தடை.. பாகிஸ்தானுக்கு பேரிழப்பு?

வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினால் செலவுகள் குறைந்து, பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published on: 

இந்தியாவுடனான தற்காலிக வர்த்தகத் தடையால், பாகிஸ்தானுக்கு 3 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வர்த்தக அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளது தேசிய கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில், 2 நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை மீண்டும் சீராக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான வர்த்தக உறவில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி வர்த்தகம் பெருமளவில் முடங்கியது. இதன் காரணமாக, இந்தியாவிலிருந்து குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை, பாகிஸ்தான் தொலைதூர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துச் செலவும், சரக்குக் கட்டணமும் அதிகரித்திருப்பதுடன், பொருட்கள் வந்து சேருவதற்கான கால அவகாசமும் அதிகரித்துள்ளது.

புல்வாமா
புல்வாமாANI

குறிப்பாக, பாகிஸ்தானின் மருந்துத் தயாரிப்புத் துறை இந்தியாவிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைச் சார்ந்திருக்கிறது. மீண்டும் இந்தியாவிலிருந்து அவற்றை இறக்குமதி செய்ய முடிந்தால், ஆண்டுக்கு 18,000 கோடி முதல் ரூ.28,000 கோடி ரூபாய் வரை சேமிக்க முடியும் என பாகிஸ்தான் - இந்தியா வர்த்தக கவுன்சில் தலைவர் நூர் முகமது கசூரி தெரிவித்துள்ளார்.

அதேபோல், பாகிஸ்தானின் ஜவுளித் தொழிலும் இந்த வர்த்தகத் தடையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பருத்தி உற்பத்தி குறைந்துள்ள நிலையில், பிரேசில், எகிப்து, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதனால் மட்டும் 47,470 கோடி ரூபாய் டாலர்கள் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்க்கரை, உரம், சிமெண்ட், பெட்ரோலியப் பொருட்கள், இரும்பு, எஃகு, காய்கறிகள் மற்றும் கனரக இயந்திரங்கள் எனப் பல்வேறு பொருட்களையும் தொலைதூர நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்Reuters

இந்தியாவுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினால், இறக்குமதிச் செலவுகளைக் குறைப்பதுடன், முதலீடு, சுற்றுலா மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் அதிகரிக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசியல் வேறுபாடுகள் இருந்தாலும், பொருளாதார வாய்ப்புகளை இரு நாடுகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பெரும் சோகத்தை ஏற்படுத்திய பஹல்காம் தாக்குதல், அதற்கு பதிலடியாக இந்திய ராணுவத்தின் ஆப்பரேசன் சிந்துர் என இந்தியா பாகிஸ்தான் இடையே தொடர்ந்து மோதல் நிலவி வரும் நிலையில், இந்தியாவுடனான வர்த்தகத்தை மீண்டும் தொடங்க வேண்டும் எனப் பாகிஸ்தான் வர்த்தகத் தரப்பிலிருந்தே கோரிக்கை எழுந்திருப்பது கவனம் பெற்றுள்ளது.

Pakistan’s $40 Billion Loss: Will Trade With India Resume?
அபார வீழ்ச்சியில் தங்கம்! ஒரு சவரன் இவ்வளவு தானா? தீபாவளிக்கு டபுள் ட்ரீட்!