'இந்தியாவுடன் நிரந்தர அமைதியை விரும்புகிறோம்' - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

'இந்தியாவுடன் நிரந்தர அமைதியை விரும்புகிறோம்' - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்
'இந்தியாவுடன் நிரந்தர அமைதியை விரும்புகிறோம்' - பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்

இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு, இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370-ஐ பிரதமர் மோடி தலமையிலான இந்திய அரசு நீக்கியது. இதன் மூலம், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, அது இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டது. இருந்தும் தொடர்ந்து காஷ்மீர் எல்லை பகுதிகளில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்திற்கு இடையே பல்வேறு தாக்குதல்கள் மாறி மாறி நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

இந்நிலை நீடித்து வரும் நிலையில். பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை பாகிஸ்தான் விரும்புவதாகவும், காஷ்மீர் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என்றும் தற்போது தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவிடம் அவர் பேசுகையில், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் போர் ஒரு விருப்பமாக இருக்காது என்பதால், பேச்சுவார்த்தை மூலம் இந்தியாவுடன் நிரந்தர அமைதியை விரும்புவதாக கூறியுள்ளார். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் மக்களின் நிலைமைகளை மேம்படுத்துவதில் மட்டுமே போட்டி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஷபாஸ் ஷெரீப் , பாகிஸ்தான் தனது எல்லைகளை பாதுகாப்பதற்காக ராணுவத்துக்கு செலவிடுவதாகவும், ஆக்கிரமிப்புக்காக அல்ல என்றும் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com