‘கட்ச் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம்’- கடலோர காவல் எச்சரிக்கை
குஜராத் மாநில கட்ச் பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த முயற்சி செய்து வருவதாக உளவுத்துறை தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் கட்ச் பகுதி வழியாக பாகிஸ்தானில் பயிற்சிபெற்ற தீவிரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டிருப்பதாக கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது
எச்சரிக்கையை அடுத்து தீவிரவாதிகள் நுழைவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குஜராத் போலீஸ், பாதுகாப்பு படைகள் மற்றும் உளவுத் துறையைச் சேர்ந்தவர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் உள்ள துறைமுகங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கும்படி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானிய தீவிரவாதிகள் கடல் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவியது குறிப்பிடத்தக்கது.