\
Pakistan tense before big Imran Khan Party protest
imran khanreuters

’இம்ரான் கானை விடுவிக்கணும்..’ களத்தில் குதித்த கட்சி.. அச்சத்தில் படைகளைக் குவிக்கும் பாக். அரசு!

இம்ரான் கானின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.
Published on: 
Summary

பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கானை விடுவிக்கக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியை அக்கட்சி அறிவித்துள்ளது. இதையடுத்து, அந்நாட்டு அரசு முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (PTI) கட்சியின் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல் உட்பட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சில வழக்குகளில் தண்டனைபெற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அடியாலா தனிமைச் சிறையில் உள்ளார். அப்போதிருந்து, காவலில் இம்ரான் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், பிடிஐ தொண்டர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, இங்கிலாந்தில் வசிக்கும் இம்ரான் கானின் மகன்கள், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.

imran khan
imran khanreuters

மேலும், தங்கள் தந்தை சிறையில் மெல்ல மெல்லக் கொல்லப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளன. மேலும் மருத்துவ உதவிகள் தொடர்பாகவும் உலகளவில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில்தான், இம்ரான் கானை விடுவிக்கக் கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியை அக்கட்சி அறிவித்துள்ளது.

இதையடுத்து, ஏற்கெனவே பதற்றத்தில் இருக்கும் பாகிஸ்தான் அரசு, அடுத்த மோதலுக்குத் தயாராகி வருகிறது. இம்ரான் கான் ஆதரவாளர்கள் தலைநகரை நோக்கி நடத்தவிருந்த மாபெரும் பேரணி, செப்டம்பர் 27-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், அது தற்போது அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரணியைத் தடுப்பதற்காக மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

imran khan
imran khanreuters

மறுபுறம், அரசாங்கத்துடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், பிடிஐ பேரணியை ஒத்திவைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல்களை நடத்துவது மற்றும் இம்ரான் கான் மற்றும் பிற அரசியல் கைதிகளை விடுதலை செய்வது ஆகிய இரண்டு கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். இந்த நிபந்தனைகள் அரசாங்கத்திடம் பகிரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை சாதகமான பதில் எதுவும் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதில் இறுதி முடிவெடுக்கும் பட்சத்தில் பேரணியில் மாற்றம் நிகழலாம் எனத் தகவலகள் தெரிவிக்கின்றன.

Pakistan tense before big Imran Khan Party protest
"உங்களுக்கு 48 மணி நேரம்தான் டைம்.. Pak-க்கு பறந்த அவசர செய்தி.. இம்ரான் வழக்கில் அதிரடி திருப்பம்!

அதேநேரத்தில், பேரணியை முன்னிட்டு, பாகிஸ்தான் அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தப் பேரணியில் 25,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என காவல்துறை எதிர்பார்க்கும் நிலையில், இஸ்லாமாபாத்திற்குச் செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சரக்குக் கொள்கலன்கள் (Shipping Containers) அடுக்கப்பட்டு நகர் முழுமையாகப் பூட்டப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கொள்கலன்களை அப்புறப்படுத்தாமல் இருக்க, அவை ஒன்றோடொன்று வெல்டிங் செய்யப்பட்டு மணல் மற்றும் ஜல்லிகளால் நிரப்பப்பட்டுள்ளன. மேலும், கைபர் பக்துன்க்வா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை இணைக்கும் முக்கிய அட்டாக் பாலத்தில் (Attock Bridge) வாகனங்களின் டயர்களைக் கிழிக்கக்கூடிய கூர்மையான உலோக முட்கள் மற்றும் ஆணிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அட்டாக் மாவட்டத்தில் மட்டும் சுமார் 30,000 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பாதுகாப்புப் படையினருக்குத் தங்குமிடம் அளிப்பதற்காகப் பல பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. முன்னதாக, பேரணியைத் தடுக்கும் முயற்சியாக இம்ரான் கானின் சகோதரிகளான அலீமா கான், நூரீன் நியாசி, உஸ்மா கான் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இம்ரான் கானின் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1,500-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கட்சித் தலைமை தெரிவித்துள்ளது.

Pakistan tense before big Imran Khan Party protest
இம்ரான் கானுக்கு மருத்துவ உதவி.. 21 கேப்டன்கள் கடிதம்.. பரிசீலிக்குமா பாகிஸ்தான்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com