8 ஆண்டுகளாக தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய சுரங்கம்: காஷ்மீரில் கண்டுபிடிப்பு!

8 ஆண்டுகளாக தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய சுரங்கம்: காஷ்மீரில் கண்டுபிடிப்பு!
8 ஆண்டுகளாக தீவிரவாதிகள் ஊடுருவ பயன்படுத்திய சுரங்கம்: காஷ்மீரில் கண்டுபிடிப்பு!

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுறுவ பயன்படுத்திய சுரங்கப் பாதை ஜம்மு - காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படை வீரர்கள் இந்தச் சுரங்கப்பாதையை இன்று காலை கண்டுப்பிடித்துள்ளனர். இதன் வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 8 ஆண்டுகளாக ஊடுறுவியுள்ளார்கள் என்ற அதிர்ச்சிகர தகவலையும் தெரிவித்துள்ளனர். இதே ஜம்மு காஷ்மீர் பகுதியில் கடந்த 10 நாள்களுக்கு முன்பு இதேபோன்றதொரு சுரங்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

ஜம்மு - காஷ்மீரின் ஷகர்கர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சுரங்கப்பாதை 30 அடி ஆழம் கொண்டதாக இருப்பதாக எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தச் சுரங்கப்பாதை 7 முதல் 8 ஆண்டுகள் வரை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர். ஏற்கெனவே கண்டுப்பிடிக்கப்பட்ட சுரங்கத்தை விட இதுதான் மிகப்பெரியது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதே ஜம்மு - காஷ்மீரில் 10 நாள்களுக்கு முன்பு கதுவா மாவட்டம், ஹிராநகர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு ரகசிய சுரங்கப் பாதையைக் கண்டறிந்தனர். பாகிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியப் பகுதி வரை இந்த சுரங்கம் அமைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய எல்லை வேலியிலிருந்து சுமார் 65 அடி தூரத்திலும் இந்த சுரங்க வழி காணப்பட்டு குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com