பஹல்காம் தாக்குதல் | தண்ணீர், உணவு இல்லை.. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் திணறுமா?
பாகிஸ்தானைச் சேர்ந்த டி.ஆர்.எஃப் எனப்படும் தி ரெஸிஸ்டென்ஸ் ஃபிரண்ட் எனப்படும் பயங்கரவாத அமைப்பு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்திய கொடூரத் தாக்குலில், 26 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்ட மத்திய அரசு, இந்தியாவில் இருக்கும்
பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு பிறப்பித்தது.
அத்துடன் பஞ்சாப்பில் உள்ள அட்டாரி- வாகா எல்லையை மூடவும், சுமார் 56 ஆண்டுகளுக்கு மேலாக அமலில் இருக்கும் சிந்துநதி ஒப்பந்தத்தையும் நிறுத்திவைப்பதாகவும் அறிவித்தது. அதன்படி, சிந்து நதியில் பாகிஸ்தானுக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சிலர் திரும்ப
பெறப்பட்டுள்ள நிலையில், முப்படைகளையும் தயார் நிலையிலும்
வைத்திருக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
கேக் கொண்டு சென்ற பாகிஸ்தான் ஊழியர்..?
இதனிடையே, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதையடுத்து தூதரக அலுவலகம் அருகில் இருந்த தடுப்புகளை காவல்துறையினர் அகற்றினர்.
பாகிஸ்தான் தூதரக அலுவலகத்திற்குள் ஊழியர் ஒருவர் கேக் கொண்டு சென்ற நிலையில் பஹல்காம் தாக்குதலை கொண்டாடவே அதை வாங்கினார்கள் எனக்கூறப்பட்டது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் அரசின் எக்ஸ் தள பக்கமும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதிரடி நடவடிக்கை.. திணறும் பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, தண்ணீர், உணவு பொருட்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே கடும் பொருளாதார சிக்கலில் இருக்கும் பாகிஸ்தானுக்கு இந்தியாவின் நடவடிக்கை மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பதிலடியால் திணறலுக்குள்ளான பாகிஸ்தான், கராச்சி பகுதியில் ஏவுகணை சோதனைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஒன்று கூடி அடுத்தகட்ட
நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்பட்டு
வருவதாகவும், தக்கபதிலடி கொடுக்கவும் தயார் என்றும் மத்திய
பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் ஐ.என்.எஸ். சூரத் போர்க்கப்பலில் இருந்து கடல்சார் இலக்குகளை குறிவைத்து தாக்கும் ஏவுகணை சோதனையை இந்திய கடற்படை வெற்றிகரமாக மேற்கொண்டது.