\
பாகிஸ்தான் எல்லை படை வீரர்களின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தான் எல்லை படை வீரர்களின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

பாகிஸ்தான் எல்லை படை வீரர்களின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
Published on

காஷ்மீரில் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் எல்லை படை வீரர்களின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது.

சுமார் எட்டு பேர் கொண்ட பாகிஸ்தான் எல்லை படை வீரர்கள், கெரான் பகுதிக்கு அருகில் வந்தனர். அப்போது இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் அவர்கள் அனைவரும் பின்வாங்கிவிட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் இந்திய தரப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஹிஸ்புல் முஹாஹிதின் அமைப்பை சேர்ந்த முக்கிய பயங்கரவாதியான அப்துல் கயாம் நஜார் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இவர் 50-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com