\
எல்லையில் பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி

எல்லையில் பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி

எல்லையில் பாக். அத்துமீறல்: இந்தியா பதிலடி
Published on

இந்திய எல்லைப்பகுதி கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பாலக்கோட் மற்றும் மஞ்சகோட் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து படுகாயமடந்தவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தான் படையினரின் இந்த தாக்குதலுக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com